அத்வானி
”ராமர் கோயில் இடிப்பின்போது அத்வானி மேடையின் அருகே இருந்தார். அவர் ராமர் கோயிலை இடிக்கும் கரசேவகர்களை ஊக்குவிக்கும் வகையில் பேசினார்”
இதை சொல்லியிருப்பது அத்வானியுடைய அப்போதைய தனி பாதுகாப்பு அதிகாரியான அஞ்சு குப்தா. இது இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியமான மற்றும் வலுவான சாட்சியாம். இன்னைக்கி(தான்) சாட்சி சொல்லியிருக்காங்க.
எனக்கு ஒரே ஒரு டவுட்டு. இவரை விசாரிக்க ஏங்க இத்தினி நாள் ஆச்சி? இத்தினி நாள் என்ன பண்ணாங்க? இன்னும் எத்தினி வருஷத்துக்கு வழக்கை இழுக்கப்போறாங்கன்னு தெரியல? இன்னைக்கு ஃபுல்லா ஊடகங்கள் இதை வச்சி நல்லா அலப்பறை பண்ணுவாங்கன்னு நெனைக்கிறேன். ஊடகங்களின் செய்தி பசிக்கு அப்பப்ப இந்த மாதிரி தீனி போடுவதாகதான் எனக்குத் தெரிகிறது.
கிரிக்கெட்
முதல்ல லோக்கல். டிஎல்எஃப் ஐபில் கிரிக்கெட்.
இந்த பதிவில் கூறியிருந்ததை அப்படியே நான் ஏற்றுகொள்கிறேன். நிச்சயமாக சென்னை வேஸ்ட் கிங்ஸ் பெயர்தான் பொருத்தமானது. இப்படியா வெட்டித்தனமாக விளையாடுவார்கள். எவ்வளவு நம்பிக்கையோடு இருந்தேன்?
பேட்டிங் மட்டுமே சற்று வலுவாக உள்ளது (அதையும் பஞ்சாப் மேட்ச நெனைச்சா சொல்ல முடியலை). ஃபீல்டிங் ரொம்ப ரொம்ப மட்டம். பவுலிங் ஃபீல்டிங்க விட ரொம்ப ரொம்ப மட்டம். தென் ஆப்ரிக்காவின் டினி-யை ஏன் டீமில் செலக்ட் செய்யாமல், திரும்ப திரும்ப கோனி, தியாகி போன்றவர்களுக்கே வாய்ப்பை கொடுப்பார்கள் என்று தெரியவில்லை. பாலாஜி, மார்கெல் போன்றவர்களுக்கு எத்தனை வாய்ப்பு கொடுத்தாகிவிட்டது. ஒன்றுமே சாதிக்கவில்லை. பிராக்டிஸ் மேட்ச் மாதிரி எல்லாம் போவுது.
டீமை கலைச்சிட்டு புதுசா சீக்கிரம் ஃபார்ம் பண்ணுங்கப்பா. இந்த தடவையும் சென்னை-க்கு கப் கெடையாதுன்னு கன்ஃபார்ம்டா தெரியுது சாமியோவ்.
இரண்டாவது T20 உலககோப்பை
T20 உலக்கோப்பைக்கான இந்திய அணி டீம் அறிவிப்பு வந்துருச்சி. வழக்கம்போல தோனி கேப்டன், ஷேவக் வைஸ் கேப்டன். புதுசா விநய் குமார், பியூஷ் சாவ்லா இரண்டு பேரையும் சேத்திருக்காங்க. நான் எதிர்பார்த்து மிஸ்ஸானவங்க
1. பெங்களுர் டீமின் மனிஷ் பாண்டே
2. மும்பை டீமின் சௌரப் திவாரி
இவங்க ரெண்டுபேரோட ஆட்டம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. திரும்ப திரும்ப ரோஹித் ஷர்மாவுக்கோ, யூசுஃப் பதானுக்கோ வாய்ப்பு கொடுத்ததுக்கு இவங்களுக்கு கொடுத்திருக்கலாம். யூசுஃபுக்கு யாரும் சப்போர்ட் பண்ணாதிங்கப்பா. ஐபிஎல்-ல மட்டும்தான் நல்லா விளையாடுகிறார்.
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் மணிஷ் அன்ட் திவாரி
கடைசியா ஒரு எஸ்.எம்.எஸ் ஜோக்
1980-ல் அம்பானி ஐடிபீஐ வங்கியில் லோன் அப்ளை செய்தார். அதனை அந்த பாங்க் நிராகரித்துவிட்டது. 2008-ல் அந்த வங்கியை முகேஷ் அம்பானி வாங்க திட்டமிட்டுள்ளார். முயற்சி செய்தால் முடியாதது எதுவுமில்லை என்பதை இது உணர்த்துகிறது.
2010இல் நான் ஸ்டேட் பேங்கில் லோன் அப்ளை செய்தேன். அதனை ஸ்டேட் பாங்க் நிராகரித்துவிட்டது. எனவே 2015-ல் நான்
நான்
.........................
.........................
.........................
.........................
.........................
.........................
.........................
.........................
.........................
.........................
திரும்பவும் லோன் அப்ளை செய்ய முடிவு செய்துவிட்டேன். ஏனென்றால் இது அரசுடமை வங்கி. ஹீ ஹீ ஹீ ஹீ