Wednesday, September 30, 2009

சாம்பியன்ஸ் டிராபி - இந்தியா அவுட் ஆஃப் கேம்?



மிகவும் நம்பிக்கையுடன்தான் இருந்தேன்.

இப்படி எல்லாம் நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. எனக்கென்னெவோ இந்தியாவிற்கு அரைறிறுதிக்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. பாகிஸ்தானிடம் தோற்றது, ஆஸ்திரேலியா ஆட்டம் மழையால் பாதித்து கைவிடப்பட்டாலும் இந்தியாவிற்கு அரையிறுதியல் நுழைய இரண்டு வாய்ப்புகள் இருந்தது. ஆஸ்திரேலியா பாகிஸ்தானிடம் தோற்கவேண்டும், இந்தியா வெஸ்ட் இண்டீசை நல்ல மார்ஜினில் வெல்ல வேண்டும். இரண்டும் நடந்தால்தான் இந்தியா அரையிறுதியில் நுழையமுடியும்.

இதை எழுதும் நேரத்தில் பாகிஸ்தான் பேட் செய்து கொண்டிருக்கிறது. ரன் ரேட் 4க்கு கீழேதான் உள்ளது(4 விக்கெட் போயிடிச்சி) (45 ஓவர் முடிந்துவிட்டது). ஆஸ்திரேலியா வெல்ல நிறையவே வாய்ப்பு இருப்பது தெரிகிறது. சோ, இந்தியா வெளியேற்றப்படுவது தவிர்க்கமுடியாததாகவே தெரிகிறது.

கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாகவே தரவரிசைப்பட்டியலில் முதல் மூன்று இடங்களுக்குள் இருந்த, தொடர் துவங்கும் முன் முதலிடத்தில் அணியின் நிலைமை இப்படியா ஆகும். பாகிஸ்தானிடம் ஆஸ்திரேலியா தோற்கவேண்டும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இந்தியா கம்ஃபோட்டபுள் வெற்றி பெற வேண்டும் என்று எத்தனை கணக்குகள். ஏன்தான் முதலிடத்தில் வந்ததோ இந்திய அணி என்று வெறுப்பாக இருக்கிறது. ஷேவாக், யுவராஜ் இருவர் இல்லாதது நன்றாகவே தெரிகிறது. ஓப்பனிங்கில் ஷேவாக் இருந்திருந்தால் நிச்சயமாக பாகிஸ்தானை நாம் வென்றிருக்க முடியும். யுவராஜ் மிடில் ஆர்டரில் நிச்சயமாக உதவியிருப்பார். எல்லாம் போச்சி. இனிமேல் யாரும் ஒன்றும் செய்ய முடியாது.

இந்தியாவின் நிலைதான் இப்படி, மற்றப்படி சாம்பியன்ஸ் டிராபி ஆட்டங்கள் நன்றாகவே இருக்கின்றன. கிரிக்கெட்டில் நினைப்பது ஒன்று, நடப்பது ஒன்றாகவே இருககும், எதையுமே கணிக்க முடியாது என்பார்கள். அது உண்மை என்று இந்த தொடர் நிருபிக்கிறது.


  • முதல் ஆட்டத்தில் ஸ்ரீலங்கா வெற்றி பெற்றப்பிறகு இப்படி அநியாயமாக வெளியேறும் என்றும் யாரும் நினைக்கவில்லை. ஓவர் கான்ஃபிடன்ஸ்?
  • நேட்வெஸ்ட் சீரிஸில் ஆஸ்திரேலியாவிடம் நாயடி பேயடி வாங்கிய இங்கிலாந்து அணி இப்படி ஒரு ஆட்டம் ஆடும் என்றும் நினைக்கவில்லை. லோஷன் அவர்கள் வெப்சைட்டில் இவர்கள் ஏன் இங்கு ஆட வந்தார்கள் என்றும் படித்திருந்தேன். ஒன்டே கிரிக்கெட்டில் எதுவும் நடக்கும் என்று நிருபித்து உள்ளது இங்கிலாந்து (நேற்றைய நியூலாந்திற்கெதிரான ஆட்டம்தான் செம சொதப்பல்)
  • இந்தமுறையாவாது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ளாது என்று நினைத்தால், மீண்டும் மீண்டும் இப்படியா? பாவம் சவுத் ஆஃப்ரிக்கா. செய்த பெரிய தவறு பகலிரவு ஆட்டத்தில் டாஸ் வென்று இரண்டாவதாக பேட் செய்ய தீர்மானித்தது (ஸ்ரீலங்காவிற்கு எதிரான ஆட்டத்தில்
  • டிஃபென்டிங் சாம்பியன் ஆஸ்திரேலியாவிற்கும் எல்லாமே நல்லாதான் போகிறது. மீண்டும் தொடரை வெல்ல வாய்ப்புகள் அதிகமுள்ளது ஆஸ்திரேலியாவிற்கு.
  • நியுசிலாந்து - எதிர்பார்த்ததை போலவே தொடரை வெல்ல வாய்ப்புள்ள ஒரு Black Horse. பார்ப்போம் என்ன நடக்கிறதென்று.
  • பாகிஸ்தான் - ஒன்றுமே சொல்ல முடியாது என்ன நடக்கும் என்று. ஆனாலும் டஃப் காம்படிடர்
  • இந்தியா - ??????
  • வெஸ்ட் இண்டீஸ் - லோஷன் அவர்கள் தொடரில் இங்கிலாந்து டீமை பற்றி சொல்லியிருந்தது இவர்களுக்கு பொருந்தும் முழுக்க. பயிற்சி பெற வந்துள்ள டீம்.
ஜென்டில்மேன் கிரிக்கெட் என்பதற்கேற்ப இரண்டு சம்பவங்களும் இத்தொடரில் நடந்தது. இரண்டுமே ரன் அவுட் சம்பந்தப்பட்டது. இங்கிலாந்து - ஸ்ரீலங்கா ஆட்டத்தில் மாத்யூஸ் .இரண்டாவது ரன்னுக்கு ஓட முற்பட்டப்போது பவுலர் ஆனியன்ஸ் (வேண்டுமென்றே?) இடித்ததால் ஓட முடியாததால் ரன் அவுட்டை ஒத்துகொள்ளாத மாத்யூஸ், இங்கிலாந்து கேப்டனிடம் புகார் செய்ய அவரும் பெருந்தன்மையுடன் ரன் அவுட் கோரிக்கையை திரும்ப பெற, மாத்யூஸ் மீணடும் ஆட்டத்தை தொடர்ந்தார். இதே போல நேற்று இங்கிலாந்தின் கோலிங்வுட் ரன்அவுட்(ஸ்டம்பிங்?) செய்யப்பட்டார். ஆனால் அவுட் கோரும் முன்பே அம்பையர் ஓவர் முடிந்ததாக அறிவித்ததால் ரன்அவுட் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட, நியூசிலாந்தின் கேப்டன் பெருந்தன்மையுடன் ரன் அவுட் கோரிக்கையை திரும்பபெற்றார்.  இரண்டு ஆட்டங்களிலும் பெருந்தன்மையுடன் நடந்து கொண்ட அணியே வெற்றிபெற்றது.

இந்த நிகழ்வுகள் மிகவும் அரிதான நிகழ்வாகும்.

மொத்தத்தில் நல்லாவே போயின்ட்டிருக்கு சாம்பியன்ஸ் டிராபி தொடர்.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் இந்தியா. வேற என்ன சொல்ல.

16 பேரு கருத்து சொல்லி இருக்காங்க, அப்ப நீங்க:

  1. பாக்கிஸ்தான் ஜெயிக்கனும் என்று நாம நினைக்கிற மாதிரி வெச்சுட்டாங்களே:(

    ReplyDelete
  2. குசும்பன்

    வேற என்ன சொல்ல. எல்லாம் நம்ப நேரம்தான் குசும்பன் சார்.

    தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  3. //பாக்கிஸ்தான் ஜெயிக்கனும் என்று நாம நினைக்கிற மாதிரி வெச்சுட்டாங்களே:(//

    அட போப்பா! இந்தியா ஜெயிக்கணும்னு நாம நினைச்சாலே ஜெயிக்கிறதில்லை! பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு நினைச்சா மட்டும் நடக்கவா போகுது! வேணும்னா ஆஸ்திரிலியே ஜெயிக்கணும்னு வேண்டிக்குவோம்!

    ReplyDelete
  4. ////பாக்கிஸ்தான் ஜெயிக்கனும் என்று நாம நினைக்கிற மாதிரி வெச்சுட்டாங்களே:(//

    அட போப்பா! இந்தியா ஜெயிக்கணும்னு நாம நினைச்சாலே ஜெயிக்கிறதில்லை! பாகிஸ்தான் ஜெயிக்கணும்னு நினைச்சா மட்டும் நடக்கவா போகுது! வேணும்னா ஆஸ்திரிலியே ஜெயிக்கணும்னு வேண்டிக்குவோம்!//

    நமக்கும் சொந்த செலவுல சூனியமா? என்ன சிபி சார் இது?

    தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. //தங்கள் முதல் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி//

    எத்தினி தபா வந்தாலும் கரெக்டா கணக்கு வெச்சி அந்த எண்ணிக்கையைச் சொல்லி நன்றி சொல்லுவீங்களா? யூ ஆர் ரியல்லி கிரேட்!

    ReplyDelete
  6. ஓ! அப்போ ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் தனியா இமெயில்ல வேற பதில் சொல்வீங்களா!

    நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவரு போல!

    ReplyDelete
  7. வெஸ்ட் இண்டீஸ் : 100/7 (30 ஓவர்) தி கிரேட் இண்டியா! என்ன சொல்றீங்க?

    ReplyDelete
  8. இது வரைக்கும் 4 தபா வந்திருக்கேன்!

    இது அஞ்சாவது!

    ReplyDelete
  9. வெஸ்ட் இண்டீஸ் : 102/8 (31 ஓவர்) தி

    ReplyDelete
  10. Pakistan 205/6 (50 ov)

    Australia 176/7 (41.5 ov)

    ReplyDelete
  11. Australia require another 18 runs with 2 wickets and 19 balls remaining

    ReplyDelete
  12. INDIA 25 FOR 2 மொக்க ஆட்டம் நாதாரிங்க

    ReplyDelete
  13. pathivula neenga mattum than mokka podanuma... avungalum podatum MOKKAI

    ReplyDelete
  14. விளையாட்டில் வெற்றி தோல்வி என்பது வரும்......ஆனால் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற மனபான்மை சமீபத்தில் பெருகி வ்ருவது நல்லதில்லை

    ReplyDelete
  15. //நாமக்கல் சிபி
    நீங்க ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்பப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப நல்லவரு போல!//

    ஆமாங்க.

    ஷபி
    ஜெயிச்சி ஒண்ணும் ஆவபோறதில்லன்னு இந்த மாதிரி ஆடியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.

    மனசு

    மேலும் மொக்கைகள் வரவேற்கப்படுகின்றன.

    ஸ்ரீகாந்த்

    நான் முக்கியமான தொடர்களில் முழுத்திறமையை வெளிபடுத்தி வெற்றி பெற வேண்டும் என்றே விரும்புகிறேன். நேற்று ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றாலும் அதுதான் பெருமைக்குரிய தோல்வி. இதைத்தான் நான் இந்திய அணியிடம் எதிர்பார்க்கிறேன். நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவிற்கு இது கேவலமான வெற்றி.

    ReplyDelete

Related Posts with Thumbnails