Tuesday, October 6, 2009

இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபி வென்றது ஆஸ்திரேலியா



தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது ஆஸ்திரேலியா. புதிய வீரர்களின் திறமையை சரியான முறையில் வெளிப்படுத்த வைத்தே ஆஸ்திரேலியா வென்றுள்ளது. இந்த தொடரில் அனைத்துமே ஆஸ்திரேலியாவிற்கே சாதகமாக இருந்தது மிகபெரிய அடி நியூசிலாந்தின் கேப்டன் வெட்டோரி முக்கியமான இந்த ஃபைனல் போட்டியில் பங்கு பெறமுடியாமல் போனது, டாஸ் வென்ற ஸ்டேண்ட் இன் கேப்டனின் டக்அவுட் (இப்படியா ஒரு முக்கியத்தொடரில் அதுவும் ஃபைனலில் டொக்கு வைப்பது), துல்லியமான பந்துவீச்சு (ரன் எடுக்கவே முடியவில்லை நியூசிலாந்து வீரர்களால்) அனைத்துயுமே ஆஸ்திரேலியா அணி சாதகமாக மிக சரியாக பயன்படுத்திக்கொண்டது.


 வெறும் 201 ரன் டார்கெட். சொல்லவா வேண்டும். எந்த பதட்டமும் இன்றி சுலமாக சேஸ் செய்துவிட்டது ஆஸ்திரேலியா. ஷேன்வாட்சனின் செஞ்சுரி, வொய்ட்டின் ஃஹாப் செஞ்சுரி இருவரின் ஆட்டம் போதுமானதாக இருந்தது. என்ன இதற்கு 45.4 ஓவர்கள் ஆனது கொஞ்சம்  அதிகம்தான். மீண்டும் தான் ஒரு உலக சாம்பியன்தான் என்று நிருபித்துள்ளது ஆஸ்திரேலியா.



பவுலிங்கில் சாதித்தவர்கள்



 கலக்கல் பேட்டிங் (செஞ்சுரி அண்டு நாட் அவுட்)




மீணடும் நான்தான் உலகிலேயே சிறந்த கேப்டன் என்று நிருபித்த ரிக்கி




 கோப்பையுடன் உலகசாம்பியன் அணி



இந்த வெற்றியின் மூலம் மீண்டும் தரவரிசைப்பட்டியலில் முதலிடத்தை கைபற்றிக்கொண்டது ஆஸ்திரேலியா. இந்தியா இரண்டாவது, சவுத் ஆஃப்ரிக்கா மூன்றாவது இடம்.


0 பேரு கருத்து சொல்லி இருக்காங்க, அப்ப நீங்க:

Post a Comment

Related Posts with Thumbnails