கடந்த வெள்ளியன்று(02.10.2009) உ.போ.ஒ. படத்தை நானும் பார்த்துவிட்டேன். இப்பதிவில் நான் படத்தை விமர்ச்சிக்கவில்லை(விமர்சனம் செய்ய எனக்கு தெரியவும் தெரியாது, நான் ஒரு சாதாரண ரசிகன்தான், அதற்கெல்லாம்தான் கேபிள் சங்கர் போன்ற (பதிவுலகின்) தாதாக்கள் இருக்கிறார்களே). ஹிந்தி வெர்ஷனும் பார்த்தது இல்லை. ஆனால் யாருடைய பதிவிலோ ஹிந்தி படத்தின் விமர்சனம் படித்திருக்கிறேன்.
பொதுவாக எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. க்ளைமாக்ஸில் மோகன்லால் எப்படி கமல் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கிறார், அதுவும் அவ்வளவு துல்லியமாக? எனக்கு புரியவில்லை. படம் முழுவதும் ஒரு non-stop பரபரப்பு உள்ளது.
காமன் மேனின் (கமலின்) கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். இருந்தாலும் நம்முடைய அரசியல்வாதிகளின் மீறி செயல்படமுடியாமல் இருக்கும் (இருந்தாக வேண்டிய) போலிசாரை எந்த அளவு நம்பமுடியும். ஒரு புறம் தீவிரவாதிகள் என்ற போர்பையில் ஒரு சில fake என்கவுன்டர்கள் நடக்கின்றன. மற்றொருபுறம் அனைத்து ஆதாரங்களும் இருந்தும் மும்பை தாக்குதல்கள் நடத்திய ஒரு தீவிரவாதிவாதியை நம்மால் தண்டிக்கமுடியவில்லை. அனைத்திற்கும் காரணம் இதிலும் அரசியல் செய்யும் நம்முடைய தலைவர்களாக இருக்கும் அரசியல்வா(வி)யாதிகளே.
அமெரிக்காவில் செப்டம்பர் தாக்குதல் நடந்தபோது அமெரிக்கா எந்த நாட்டிடமும் புகார் தெரிவிக்கவில்லை. யார் செய்தது என்ற தெரியவந்தபின் அந்தநாடு உடனடியாக நடவடிக்கை எடுத்தது, யாரிடமும் கருத்தோ ஆதரவோ இல்லை வேறு எந்த புண்ணாக்கோ கேட்டு கொண்டிருக்கவில்லை. அந்நாடு எடுத்த நடவடிக்கைக்கு மற்ற நாடுகள் அனைத்துமே கேட்காமலேயே ஆதரவு அளித்தது. அளிக்க வைத்தது அமெரிக்கா என்றும் சொல்லலாம். ஏனென்றால் நடந்தது அவ்வளவு பெரிய அராஜகம். இத்தகைய துணிவை நம்முடைய முதுகெலும்பற்ற தலைவர்களிடம் எதிர்பார்ப்பது தவறே. இவர்கள் சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் பப்ளிசிட்டி ஸ்டன்ட் அடிக்கவும், அதை எந்தளவு மீடியாவில் பப்ளிசிட்டி செய்யமுடியுமோ அதை செய்யவும்தான் லாயக்கு.
அமெரிக்காவில் நடந்த செப்டம்பர் தாக்குதலுக்கு சற்றும் குறையாத ஒரு நிகழ்வே மும்பையில் நடந்தது. கிட்டதட்ட ஒரு வருடம் கழித்தும் நம் தலைவர்கள் இன்னமும் அமெரிக்காவிற்கு செல்லும் போது அந்த நாட்டு அதிபரிடம் புகார் செய்வதுடன் தங்கள் கடமை முடிந்ததாகவே கருதுகிறார்கள். இதை பார்க்கும் போது உ.போ.ஒ.-னில் எம்.எஸ்.பாஸ்கர் போலிஸ் ஸ்டேஷனில் அளிக்கும் புகார் காட்சிதான் மனதில் ஓடுகிறது. இதை பார்த்துக்கொண்டிருப்பதை தவிர நமக்கு வேறு வழியில்லை. நம் தலையெழுத்து. என்ன செய்வது.
கடைசியாக இணையத்தில் தேடிக் கொண்டிருக்கும் ஹேக்கரிடம் மோகன்லால் கேட்கிறாரே கண்டுபிடிச்சாச்சா? என்று கவனித்தீர்களா?
ReplyDeleteஹேக்கரோ கமலின் கதையைக் கேட்டு கண்டுபிடித்தும் உண்மையை மறைத்து தெரியலை ஸார் என்பார். அவரை நம்பாமல் மோகன்லால் லேப்டாப்பை திருப்புவார் பார்த்தீர்களா?
அப்போது லேப்டாப்பில் கமல் இருக்கின்ற இடத்தின் முகவரி இருப்பதாகக் காட்டுகிறார்கள்.
அதை நொடியில் படித்துவிட்டு மோகன்லால் வேகமாக வெளியேறி கமலை சந்திக்க வருகிறார்.
இந்தக் காட்சி குறிப்பால் உணர்த்துவது என்பதால் உங்களைப் போலவே படம் பார்த்தவர்களில் பலருக்கும் தெரியாமல் குழம்பித்தான் போனார்கள்..!
இந்த இடத்தில் ஒரு வசனத்தை வைத்திருக்கலாம்..!
//பொதுவாக எனக்கு படம் மிகவும் பிடித்திருந்தது. க்ளைமாக்ஸில் மோகன்லால் எப்படி கமல் இருக்குமிடத்தை கண்டுபிடிக்கிறார், அதுவும் அவ்வளவு துல்லியமாக? //
ReplyDeleteஇதான் உங்க டெளட்டா? அந்த ஐஐடி பையன் கண்டுபிடித்து (கமல் இடத்தை) விடுகிறான். ஆனா கண்டுபிடிக்க முடியலன்னு பொய்சொல்றான்.மோகன்லால் அவன் லாப்டாப்பை ஒரு பார்வைப் பார்த்து புறப்படுகிறார்.
முடிந்தால் என் விமர்சனத்தைப் படித்து கருத்துச் சொல்லவும்.
ReplyDeleteஅந்தளவு மிகச்சரியாக கண்டுபிடிக்கமுடிமா என்ன?
ReplyDeleteஎனக்கு தெரிந்து ஒரு ip address-சை வைத்து அந்த போனின் முகவரியை வைத்துதான் கண்டுபிடிக்க முடியும் என்று நினைக்கிறேன்.
கமல் இருப்பது ஒரு கட்டபட்டு கொண்டிருக்கும் கட்டடிடத்தின் மொட்டை மாடியில். என்னதான் டெக்னாலஜி என்றாலும் இது இடிக்கிறது எனக்கு?
தமிழில் மட்டும் இப்படியா இல்லை ஹிந்தி படத்தலும் இப்படிதானா?
இதத்தான் நான் அப்பவே சொன்னேன், வல்லரசு மாதிரி விஜயகாந்த் வைச்சு பண்ணியிருந்தா அவரே ஒரு ஆளவிட்டுச் சொல்லச் சொல்லியிருப்பார்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுரேஷ்.
ReplyDelete