Friday, November 6, 2009

வழிக்கு வந்த செல்போன் சர்வீஸ் ப்ரொவைடர் நிறுவனங்கள்



ஒரு வழியாக செல்போன் சர்வீஸ் ப்ரொவைடர்கள் வழிக்கு வந்துள்ளனர். ஏர்டெல், ஏர்செல், ஐடியா என்று அனைத்து கம்பெனிகளும் லோகல்/எஸ்டீடி என்று அனைத்து அழைப்புளுக்கும் கட்டணம் ஒரு செகண்ட் 1 பைசா என்று போட்டி போட்டுகொண்டு குறைத்துவிட்டனர். அனைத்து புண்ணியமும் டாடா டொகோமா-வையே சேரும். முதல்முறையாக டாடா டொகோமா தான் இந்த வசதியை அறிமுகப்படுத்தியது. அதுவும் எப்படி, இந்தியா முழுவதும் அனைத்து செல்போன்/லேண்ட்லைன் என்று எந்த நம்பருக்கு பேசினாலும் 1 செகண்டுக்கு 1 பைசாதான் கட்டணம்..

எனக்குத் தெரிந்து எந்த ஒரு புதிய செல்போன் சர்வீஸ் ப்ரொவைடரும் ஆரம்பித்த உடனேயே இந்த அளவு பிசினஸ் செய்ததது கிடையாது. ஒரு கட்டத்தில் புதுவையில் சிம்கார்ட் கிடைக்கவேயில்லை. என் நண்பர்கள் சிலர் இதற்கென்றே சென்னைக்கு சென்று வாங்கிவந்தார்கள். டாடா டொகோமாவை பொறுத்தவரை ஒரே குறை அனைத்து இடத்திலும் சிக்னல் கிடைப்பதில்லை. கூடிய விரைவில் இந்த பிரச்சனை தீர்த்துவிடுவார்கள் என்றுதான் நினைக்கிறேன்.

இது மட்டும் இல்லை. டாடா டொகோமா டூயல் சிம் மொபைல் போன் விற்பனையை அதிகரிக்க உதவியுள்ளது. ஏனென்றால் பல வருடங்களாக ஒரே மொபைல் எண் வைத்திருந்தவர்கள் தங்களது பழைய நம்பரை இழக்கவிரும்பாமல் இன்கமிங்கிற்கு பழைய நம்பர், அவுட்கோயிங்கிற்கு டாடா டொகோமா எண் எனற வசதியை பெறுவதற்கு டூயல் சிம் மொபைல்கள் வாங்கிவிட்டனர். அதிலும் ஸ்பைஸ் போன்ற மொபைல் நிறுவங்கள் வெறும் 3500 ரூபாய்க்கே டூயல் சிம் மொபைலை (அதிலும் அதிலுள்ள வசதிகளும் அதிகம்.. 8 ஜிபி மெமரி கார்ட், வையர்லெஸ் எஃப்.எம். ரேடியோ, Blue Tooth. என்று தேவையான அனைத்து அடிபடை வசதிகளும் உண்டு) கொடுக்கின்றன. மிடில் கிளாஸ் ஆசாமிகள் அனைவருக்கும் இது நல்ல சாய்ஸ் என்றே சொல்வேன்.

இதே போல் ஐடியா செல்போன் நிறுவனம் எந்த அழைப்பு என்றாலும் 40 பைசா என்னும் திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

 இந்த கட்டணகுறைப்பை எப்பொழுதோ செய்திருக்கலாம் இந்த நிறுவனங்கள். எஸ்டீடிக்கு கட்டணங்கள் எல்லாம் ஒரு காலத்தில் எவ்வளவு அதிகமாக வாங்கினார்கள். இப்பொழுது மட்டும் எப்படி குறைக்க முடிகிறது? அப்படியென்றால் இத்தனை நாள் நுகர்வோர்களிடம் கொள்ளை அடித்தார்கள் என்றுதானே அர்த்தம்? அதிலும் பூஸ்டர் பேக் அது இது என்று எந்த எந்த பெயரில் எல்லாம் கொள்ளை அடித்திருக்கிறார்கள்.

இன்னும் பல இருக்கிறது. எம்எம்எஸஸ், ஜிபிஆர்எஸ் போன்ற பல சேவைகளுக்கெல்லாம் இந்த நிறுவனங்கள் வசூலிக்கும் கட்டணங்கள் அதிகமாகவே உள்ளது. கூடிய விரைவில் இதற்கும் ஏதாவது வழிபிறக்கும் என்று நினைக்கிறேன்.



தனியார் நிறுவனங்கள் இப்படி நாலு கால் பாய்ச்சலில் கட்டணங்களை குறைக்க, வழக்கம்போல் அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் ஆழ்ந்த நித்திரையில் உள்ளது. நியாயமாக பார்த்தால் அரசுதான் இந்த கட்டணகுறைப்பை முதலில் செய்திருக்கவேண்டும். இவர்கள் எப்பொழுது குறைப்பார்களோ தெரியவில்லை?

1 பேரு கருத்து சொல்லி இருக்காங்க, அப்ப நீங்க:

  1. Good analysis sir. Telecom companies are doing lot of things to swindle money. I met one person who was in marketing in a leading company and he was telling about the billing system. Horrible !!

    ReplyDelete

Related Posts with Thumbnails